Notation Scheme

ஸமுகா2ன நில்வ - ராகம் கோகில வராளி - samukhAna nilva - rAga kOkila varALi

English Version
Language Version

பல்லவி
ஸமுகா2ன நில்வ கல்கு3னா கமலானன

அனுபல்லவி
1க்ஷம கல்கு3 பூ4-தனய லக்ஷ்மணாதி3
மஹாத்முலகே கானியன்யுலகு (ஸ)

சரணம்
கமலாஸனாத்3யமர தி3க்பதுலு
கலஸ1 வாரிதி4லோ ஜூட3 நேரக
கு3மி கூடி3 மொரலிட3 2கார்யமுலு
கொன-ஸாகெ3னட
த்யாக3ராஜ 3வினுத (ஸ)


பொருள் - சுருக்கம்
கமல வதனத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
பொறுமையுடை, நிலமகள், இலக்குவன் முதலான மேலோருக்கேயன்றி பிறருக்கு, உனது முன்னிலையில் நிற்கக் கிடைக்குமா?
மலரோன் முதலாக அமரரும், திசை மன்னரும் குடக் கடலில் உன்னைக் காண நேராது, ஒன்று கூடி முறையிட அவர்தம் காரியங்கள் கைகூடினவாம்!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸமுகா2ன/ நில்வ/ கல்கு3னா/ கமல/-ஆனன/
முன்னிலையில்/ நிற்க/ கிடைக்குமா/ கமல/ வதனத்தோனே/


அனுபல்லவி
க்ஷம/ கல்கு3/ பூ4/-தனய/ லக்ஷ்மண/-ஆதி3/
பொறுமை/ உடைய/ நில/ மகள்/ இலக்குவன்/ முதலான/

மஹாத்முலகே/ கானி/-அன்யுலகு/
மேலோருக்கே/ அன்றி/ பிறருக்கு/ முன்னிலையில் ..


சரணம்
கமல-ஆஸன/-ஆதி3/-அமர/ தி3க்பதுலு/
மலரோன்/ முதலாக/ அமரரும்/ திசை மன்னரும்/

கலஸ1/ வாரிதி4லோ/ ஜூட3/ நேரக/
குட/ கடலில்/ (உன்னைக்) காண/ நேராது/

கு3மி/ கூடி3/ மொரலிட3/ கார்யமுலு/
ஒன்று/ கூடி/ முறையிட/ (அவர்தம்) காரியங்கள்/

கொன-ஸாகெ3னட/ த்யாக3ராஜ/ வினுத/
கைகூடினவாம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3வினுத - நுத

மேற்கோள்கள்
2கார்யமுலு கொன-ஸாகெ3னட - பிரமன் முதலான தேவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று விஷ்ணுவை புவியில் அவதரித்து இராவணனை வதைக்க வேண்டினர். வால்மீகி ராமாயணம்,பால காண்டம், அத்தியாயம் 15-ஐ நோக்கவும்
Top

விளக்கம்
1க்ஷம கல்கு3 - பொறுமை - இச்சொல் சீதைக்கு மட்டுமன்றி இலக்குவனுக்கம் மற்ற மேலோர்களுக்கும் பொருந்தும்.

1க்ஷம கல்கு3 - சீதையை மீட்க பெரும் போர் தொடுத்த ராமன், போர் முடிந்தபின் சீதையை 'நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்' என இரக்கமின்றி உரைக்க, சீதை நெருப்பினுள் புகுந்தாள். அதன்பின் ராமனுடன் கூடி புஷ்பக விமானத்தில் அயோத்தி விரைந்தாள். இடையில் தன்னைத் தன் கணவன் கேவலப்படுத்தியதை சற்றும் பொருட்படுத்தாமலும், சற்றேனும் வருத்தமின்றியும் திரும்ப ராமனுடன் இணைந்தது பொறுமையின் இலக்கணமாகும்

சீதையை இராவணன் அபகரித்துச் செல்கையில் சீதை தனது நகைகளையெல்லாம் துணி்யில் கட்டி கீழே இருந்த வானரர்களை நோக்கி எறிந்தாள். இராமன் அந்த நகைகளை அடையாளம் காட்டென்று இலக்குவனிடம் கூற, அவனோ, தான் ஜானகியை தாயாக பாவித்து தினமும் அவள் கால்களில் வணங்கியமையால், கால் சலங்கை மட்டும் அடையாளம் தெரியும் என்றான். சீதை, அப்படிப்பட்ட இலக்குவனை, மாரீசனை ராமன் கொன்றுவிட்டானோ என்றஞ்சி, இராமனுக்குத் துணையாக போகச் சொல்ல, இலக்குவன் தான் சீதையை விட்டுப் போக மறுத்ததால், கொடும் சொற்கள் பகன்று அவனுடைய மனத்தை மிக்கு நோக வைத்தாள். ஆயினும் இலக்குவனின் பற்று சிறிதும் குறையவில்லை. இதுவும் பொறுமைக்கு மேலானதோர் உதாரணம்.

நிலமகள் - சீதை
குடக் கடல் - பாற்கடல்
Top